அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகேயுள்ள கல்லாத்தூர் கிராமத்திலுள்ள ஸ்ரீசுந்தரமூர்த்தி விநாயகர், ஸ்ரீபழனியாண்டவர் , ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த 18 ஆம் தேதி முதல் வேள்வி, கலச வழிபாடு, 19 ஆம் தேதி திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி,திருமுறை பாராயணம், ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால வேள்வி, யாத்ர தானம் ஆகியவை நடத்தப்பட்டு, பின்னர் கோயில் கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். கும்பாபிஷேகத்தை காண கல்லாத்தூர், தண்டலை, சின்னவளையம், செங்குந்தபுரம், ஜயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 8

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

மே மாத எண்கணித பலன்கள் – 5
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

