ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தா.பழூரில் மணல் குவாரி அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம், அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் திங்கள்கிழமை

Updated On :21 மே 2018, 9:17 pm

அரியலூர் மாவட்டம், தா. பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் குவாரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மு. விஜயலட்சுமியிடம், அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனு: தா. பழூர் ஒன்றியம், இடங்கண்ணி ஊராட்சிக்குட்பட்ட அண்ணகாரன்பேட்டை கிராமத்தில் கடந்த ஆண்டு மாட்டு வண்டி விவசாயிகளுக்காக மணல் குவாரி செயல்பட்டு வந்தது. ஆனால் அந்த மணல் குவாரி மூடப்பட்டது. இதையடுத்து, தஞ்சை மாவட்டம் நீலத்தநல்லூர் ஊராட்சி மேலாத்துகுறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் மணல் குவாரியில் அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி விவசாயிகள் மணல் எடுத்து வந்தநிலையில், தற்போது நீலத்தநல்லூர் கிராம மக்கள் அனுமதிப்பதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். அரியலூர் கொத்தவாசல் சாலையில் குடியிருப்புகள் மற்றும் ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப் பள்ளி, தனியார் மருத்துவமனை உள்ளது. இதன் அருகே 25 மீட்டர் தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ - மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் அச்சாலையில் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே ஆட்சியர் மேற்கண்ட பகுதியிலுள்ள மதுக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் பெரிய வெண்மணி ஆர். வரதராஜன் திங்கள்கிழமை ஆட்சியரிடம் அளித்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.