அரியலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சிவசாமி தலைமை வகித்தார். மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும். ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு திட்டத்தை குடும்ப ஓய்வூதியர்களுக்கும் நீடிக்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1,50,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியர் அனைவருக்கும் வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். பொங்கல் பரிசு தொகையைப் பாகுபாடின்றி அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு முழு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புலவர் சி.இளங்கோ வரவேற்றார். சி.திருநாவுக்கரசு நன்றி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கே. பாக்யராஜ் இறுதிச் சடங்குகள் எப்போது? குடும்பத்தார் தகவல்

ஸ்பெயினிடம் தோல்வி: கண்ணீருடன் வெளியேறியது 2 முறை உலகக் கோப்பை வென்ற உருகுவே!





