இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

அரியலூர் அருகே  ஏரியில் கிடந்த சுவாமி சிலை மீட்பு

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் கிடந்த வீரபத்திர சுவாமி பித்தளை சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.

Updated On :8 அக்டோபர் 2018, 8:40 am IST

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகேயுள்ள ஏரியில் கிடந்த வீரபத்திர சுவாமி பித்தளை சிலை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி கிராம சின்ன ஏரியில் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதி மாணவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஏரிக் கரை உள்புறத்தில் ஒரு சிலை கிடந்ததைக் கண்ட மாணவர்கள், ஊர் மக்களிடம் தெரிவித்தனர். 
இதையடுத்து ஊர் பொதுமக்கள் வந்து பார்த்து அளித்த தகவலின்பேரில் வந்த,விக்கிரமங்கலம்  காவல் ஆய்வாளர் பிரேமா,சிலையை மீட்டு விசாரணை மேற்கொண்டதில், சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள பித்தளை வீரபத்திர சிலை என்பது தெரியவந்தது.இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.