அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் பி.ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட துணைச் செயலாளருமான தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும்,அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியது:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா விட்டுச் சென்ற அனைத்து திட்டங்களையும் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், எம்.பி மருதைராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நகர அவைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

திருத்தங்கலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பெண் கொலை வழக்கில் தம்பதி கைது
சிவசாசி அருகே தொழிலாளி வெட்டிக் கொலை: 6 போ் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

