கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

ஏரியில் பனைவிதைகளை நட்ட  முன்னாள் மாணவர்கள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே கீழவிளாங்குடி வீரபிள்ளைகுட்டை ஏரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பனைவிதை நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:10 am

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே கீழவிளாங்குடி வீரபிள்ளைகுட்டை ஏரியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் பனைவிதை நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
செந்துறை அருகே நமங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் தென்னரசு, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 6 பேர் சேர்ந்து கீழவிளாங்குடி வீரபிள்ளைகுட்டை ஏரி கரைகளின் உட்புறம் மற்றும் வெளிபுறங்களில் 1,500 பனை விதைகளை நட்டனர். உடையார்பாளையம், விளாங்குடி பெரிய ஏரி மற்றும் செந்துறை பகுதியிலுள்ள ஏரிகளில் பனைவிதைகள் விதைப்பதாக தெரிவித்தனர். நல்லாசிரியர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.