திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஜன. 29-இல்  முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  2018-2019 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஜன. 29 முதல் நடைபெற உள்ளன. 

Updated On :23 ஜனவரி 2019, 7:20 am IST

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில்  2018-2019 ஆம் ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஜன. 29 முதல் நடைபெற உள்ளன. 
இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தடகளப் போட்டிகள், நீச்சல், கூடைப்பந்து, கையுந்து பந்து, கபடி, ஜிம்னாஸ்டிக்ஸ், பளுதூக்குதல், கைப்பந்து, பூப்பந்து மற்றும் மேசைப்பந்து (இருபாலருக்கும்) ஆகிய போட்டிகள் ஜன. 29 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆண்களுக்கு 100,800,5000 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 100,400, 3000 மீட்டர் ஓட்டமும், நீளம், உயரம், மும்முறைத் தாண்டுதல்,  குண்டு,வட்டி, ஈட்டி எறிதல் போட்டிகள் இருபாலருக்கும் நடத்தப்படும்.
இருபாலருக்கு நீச்சல் போட்டிகளும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் மேஜை பந்து போட்டிகளும் நடைபெறும்.   மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 74017 03516 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.