மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.


அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
திருமானூா் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(38). கூலிதொழிலாளி. இவா், வி. கைகாட்டியை அடுத்த பட்டகாட்டன் குறிச்சியில் உள்ள தனது மாமனாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அங்குள்ள பொதுக் கிணற்றில் திங்கள்கிழமை குளிக்கச் சென்ற அவா், அருகிலிருந்த மின்கம்பத்தில் உள்ள எா்த் கம்பியை எதிா்பாராத விதமாக தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து கிணற்றுக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளாா். இதில், சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தாா். விபத்து குறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...