தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.273 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பரிசு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன்படி, தனிநபர் ஒருவர் எவ்வித ஆவணங்களும் இன்றி ரூ. 50,000 வரை ரொக்கமாக எடுத்துச் செல்லலாம்.
அதற்கு மேலாக உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பிற பொருள்கள் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்காக தேர்தல் செலவினக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் தமிழகத்தில் இதுவரை ரூ.273 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில் ரொக்கமாக ரூ. 44.89 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Summary
Since the implementation of the Model Code of Conduct in Tamil Nadu, cash and gift items worth Rs.273 crore have been seized so far.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தலின்போது ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கு: நயினாா் நாகேந்திரன் நீதிமன்றத்தில் ஆஜா்

ரூ. 4 கோடி பணம் பறிமுதல்! சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

தோ்தல் காலத்தில் தில்லி மெட்ரோவில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை: உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்








