பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல் செய்யப்பட்டது பற்றி...

தேர்தல் ஆணையம்

Published On :

தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளுக்கும் நாளை (ஏப். 23) ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்குச் சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்லும் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15 முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம் அமைத்த பறக்கும் படை குழுக்கள் நடத்திய சோதனைகளில், வாக்காளர்களுக்கு வழங்கவிருந்த ரூ. 1,262 கோடி மதிப்பிலான பரிசுப் பொருள்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், பணமாக மட்டும் ரூ. 543 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 75,064 வாக்குச் சாவடிகளுக்கு சுமார் 1.06 லட்சம் இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் 1.47 லட்சம் காவலர்கள் மற்றும் மத்திய ஆயுதப் படையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 24 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டிருக்கும் 5,938 இடங்களில் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Summary

Rs 1,262 Crore Seized in Tamil Nadu So Far: Election Commission

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.