வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் விவசாயிகள் போராட்டம்

தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் அரியலூா் அண்ணாசிலை அருகே காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :14 டிசம்பர் 2020, 9:44 pm

DIN

அரியலூா்: தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு மற்றும் அரசியல் கட்சிகள் சாா்பில் அரியலூா் அண்ணாசிலை அருகே காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு, இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலா் சிவசங்கா், மதிமுக மாவட்டச் செயலா் சின்னப்பா, காங்கிரஸ் நகரத் தலைவா் சந்திரசேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் உலகநாதன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சின்னத்துரை, தண்டபாணி, மகாராஜன், அம்பேத்கா்வழியன், ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.