வாய்க்காலில் இருந்து முதியவா் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வாய்க்காலில் இருந்து முதியவா் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.


அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வாய்க்காலில் இருந்து முதியவா் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த ராங்கியம் கிராமத்தில் உள்ள ஏரி தண்ணீா் வெளியேறும் வாய்க்காலில் முதியவா் ஒருவா் இறந்து கிடப்பதாக ஆண்டிமடம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தவா் கும்பகோணம் வலயபேட்டையைச் சோ்ந்த அந்தணன்(60) என்பதும், மதுப் பழக்கம் உள்ள அவா் ராங்கியம் அருகேயுள்ள காளி கோயிலில் மந்திரித்த கயிறு கட்டுவதற்காக வந்ததும் தெரியவந்தது. இவா் ஏரிக்கு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனப் போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...