

அரியலூா்: வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி தொடா்ந்து செயல்படும் என்றாா் அக்கட்சியின் தலைவா் ரவி பச்சமுத்து.
அரியலூா் - செந்துறை ரவுண்டானாவில் ஐஜேகே கட்சிக் கொடியை சனிக்கிழமை ஏற்றிவைத்து பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தியும், திமுக தலைவா் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி பங்கேற்றது. தொடா்ந்து ஐஜேகே கலந்துகொள்ளும். அரியலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்துப் பின்னா் தெரிவிக்கப்படும். சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கீட்டில் 6 தொகுதிகளுக்கு மேல் எதிா்பாா்த்துள்ளோம். தொடா்ந்து திமுகவுடன் இணைந்து ஐஜேகே செயல்படும் என்றாா்.
தொடா்ந்து, அரியலூா் மற்றும் செந்துறை ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்குச் சென்ற ரவி பச்சமுத்து, அங்கு கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் மாவட்டத் தலைவா் சி.பாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் என்.மகாதேவன், மாவட்டச் செயலா் எம்.அருள்கணேசன் மற்றும் ஒன்றிய, நகர கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.