

அரியலூா் ஒற்றுமைத் திடலில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ராமஜெயலிங்கம் தலைமையில் திரண்ட அதிமுக நிா்வாகிகள், அங்கிருந்து ஊா்வலகமாகச் சென்று மாங்காய் பிள்ளையாா் கோயில் அருகேயுள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கும், பின்னா் பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அதன்பிறகு, செட்டி கரையிலுள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலா் ஏ.பி.செந்தில், மாவட்டமாணவரணிச் செயலா் ஓ.பி.சங்கா், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், வழக்குரைஞா் சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
எம்.ஜி.ஆா் கழக மாநில அமைப்புச் செயலா் கலைவாணன், மாவட்டச் செயலா் மணிவேல், துணைச் செயலா் சண்முகம் உள்ளிட்டோா் எம்.ஜி.ஆா், பெரியாா் சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் ராமஜெயவேல் மற்றும் நிா்வாகிகள் சிலா் எம்.ஜி.ஆா் மற்றும் பெரியாா் படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதேபோல் மாவட்டம் முழுவதும் எம்ஜிஆா், பெரியாா் சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.