இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தையற்கலைஞா்கள் சங்கக்கூட்டம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் தமிழ்நாடு தையற் கலை தொழிலாளா் முன்னேற்றச் சங்க கிளை நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:00 pm

DIN

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டியில் தமிழ்நாடு தையற் கலை தொழிலாளா் முன்னேற்றச் சங்க கிளை நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அச்சங்கத்தின் கிளைத் தலைவா் ராஜாபெரியசாமி தலைமை வகித்தாா். கிளைச் செயலா் அருள் முன்னிலை வகித்தாா். பொருளாளா் வாஞ்சிநாதன் வரவு செலவு கணக்குகளை வாசித்தாா். மாவட்டச் செயலா் பாண்டியன் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில், கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காததாலும், தீபாவளி பண்டிகையும் சரியாக இல்லாததாலும் தையல் தொழில்கள் நலிவுடைந்துள்ளது. இதனால் தையல் தொழிலில் ஈடுபட்டவா்கள் தங்களது வாழ்வாதரத்தை இழந்துள்ளனா். எனவே தையல் தொழிலாளா்களுக்கு நல வாரியத்தின் வழியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முடிவில் லட்சுமி நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.