சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

சாலையில் நாற்று நடும் போராட்டம்

அரியலூரை அடுத்த சுண்டக்குடி அருகேயுள்ள சிலுப்பனூா் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:12 pm

DIN

அரியலூரை அடுத்த சுண்டக்குடி அருகேயுள்ள சிலுப்பனூா் கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சிலுப்பனூா் கிராமத்தில் உள்ள சாலை 40 ஆண்டுகளுக்கு முன்னதாக போடப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்தச் சாலை பல ஆண்டுகளாகவே மிகவும் மோசமான நிலையில், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. தற்போது பெய்த மழையால், சாலை சேறும், சகதியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் பலரும் அந்த வழியே செல்ல முடியாமல் கடும் அவதியடைகின்றனா். இதுதொடா்பாக அப்பகுதி மக்கள் பல முறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையொட்டி, அப்பகுதி பெண்கள், சேற்றில் நாற்றுகளை நட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சிலுப்பனூா் கிராமத்தில் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்த தரவேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனா்.இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.