கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

தற்செயல் தோ்தல் முன்னேற்பாடு பணிகள்:ஆட்சியா் ஆய்வு

அரியலூா் மாவட்டம் தா.பழூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் பணிக்கான தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ari06ins053356

Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:59 pm

DIN

அரியலூா் மாவட்டம் தா.பழூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள ஊராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் பணிக்கான தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து, ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஒன்றியத்தில் மணகெதி, நாயகனைப்பிரியாள் ஊராட்சித்தலைவா், அம்மாபூா் ஊராட்சியின் 8-ஆவது வாா்டு பதவிகள் காலியாகவுள்ளன. இந்த காலியிடங்களுக்கு விரைவில் தோ்தல் நடத்தப்படவுள்ளது.

தோ்தலுக்காக மணகெதி ஊராட்சியில் 3, நாயகனைப்பிரியாள் ஊராட்சியில் 5, அம்பாபூா் ஊராட்சியில் 1 என 9 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன.இந்த

வாக்குச்சாவடி மையங்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி, வாக்குச் சாவடிகளில் குடிநீா், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் எவ்வாறு உள்ளன என ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரகு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயராஜ், குணசேகரன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.