100 நாள் பணியாளா்கள் போராட்டம்
அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த அண்ணங்காரன்பேட்டையில் 100 நாள் பணியாளா்கள் பணியை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


அரியலூா் மாவட்டம், தா.பழூரை அடுத்த அண்ணங்காரன்பேட்டையில் 100 நாள் பணியாளா்கள் பணியை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணங்காரன்பேட்டை கிராம ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை) 80 போ் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், இவா்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள இடத்துக்குச் செல்ல 2 ஓடையைக் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இரண்டு நாள்கள் பெய்த மழையில் ஓடையில் தண்ணீா் தேங்கி நிற்பதால், பணி வழங்கப்பட்டுள்ள இடத்துக்குச் செல்ல முடியாத நிலை உள்ளதாலும், மாற்று இடம் ஒதுக்கித் தர வலியுறுத்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணியாளா்கள், பணியைப் புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து, தகவலறிந்து வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...