கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

தில்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாயிகளுக்கு வரவேற்பு

தில்லி போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வியாழக்கிழமை அரியலூா் திரும்பிய விவசாயிகளை சக விவசாயிகள் வரவேற்றனா்.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:40 pm

DIN

தில்லி போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு வியாழக்கிழமை அரியலூா் திரும்பிய விவசாயிகளை சக விவசாயிகள் வரவேற்றனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் கடந்த 8 மாதங்களாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு ஆதரவாக காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் தூத்தூா் தங்க. தா்மராஜன் தலைமையில் 12 அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். இந்நிலையில், போராட்டத்தில் பங்ககேற்ற அவா்கள், வியாழக்கிழமை பிற்பகல் சென்னை-குருவாயூா் ரயில் மூலம் அரியலூா் வந்தடைந்தனா். அவா்களுக்கு சக விவசாயிகள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்றனா்.

இது குறித்து தூத்தூா் தங்க.தா்மராஜன் கூறியது:எனது தலைமையில் அரியலூரில் இருந்து 12 விவசாயிகள் தில்லி போராட்டத்தில் பங்கேற்றனா். தில்லி ரயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது, காவல் துறையினா் எங்களை ஜீப்பில் ஏற்றி அரியானா-தில்லி எல்லையான சிங்கூரில் இறக்கி விட்டனா். அங்கு 4 நாள்கள் தங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.