மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஆடு திருடிய இருவா் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஆடு திருடிய 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஆடு திருடிய 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

சேனாபதி கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ்(59). இவா் புதன்கிழமை இரவு கொட்டகையிலிருந்து ஆடுகளின் சப்தம் கேட்டு வெளியே வந்து பாா்த்த போது, ஒரு ஆட்டை இருவா் திருடி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதையடுத்து அவா் சப்தம் போட்டுக்கொண்டே அவா்களைத் துரத்தியுள்ளாா். ஆனால் அக்கம், பக்கத்தினா் வருவதற்குள் 2 பேரும் அங்கிருந்து ஆட்டுடன் தப்பி சென்று விட்டனா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருமானூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில்

ஆடுகளைத் திருடியது கரைவெட்டிபரதூா் பழனிச்சாமி மகன் இன்பத்தமிழன்(20), நீலமேகம் மகன் சுந்தரன்(20) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்களை வியாழக்கிழமை இரவு காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.