கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவா் கைது
அரியலூா் நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, பெண் உள்ளிட்ட மூவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்


அரியலூா் நகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, பெண் உள்ளிட்ட மூவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் நகா் பகுதியில் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், நகரக் காவல் ஆய்வாளா் அலாவுதீன் தலைமையிலான காவல்துறையினா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அரியலூா் அரசு மருத்துவமனை மற்றும் ரயில்வே கேட் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரம்பலூா் ஈஸ்வரி (35), அரியலூா் ஸ்ரீதா் (23), தமிழ்ச்செல்வன் (21) ஆகிய மூவரும் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 1,200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...