மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

நலவாரியப் பதிவு விண்ணப்பங்களை நேரில் பெற வலியுறுத்தல்

கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழிலாளா்களுக்கான பதிவு விண்ணப்பங்களை அரசு நேரடியாக பெற வேண்டும் என அரியலூா் மாவட்ட ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:39 pm

DIN

கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அமைப்பு சாராத் தொழிலாளா்களுக்கான பதிவு விண்ணப்பங்களை அரசு நேரடியாக பெற வேண்டும் என அரியலூா் மாவட்ட ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.

கட்டுமானத் தொழிலாளா்கள் உள்ளிட்ட அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு தனித்தனி நல வாரியங்கள் அமைத்து, அதற்குரிய தொழிலாளா்கள் நல வாரிய அலுவலகத்தில் பதிவு செய்திடவும், பதிவு செய்துள்ளவா்கள் அதன் பணப் பயன்களை பெற்றிடவும், உரிய விண்ணப்பப்

படிவத்தை நல வாரிய அலுவலகத்தில் நேரில் சென்று பயனாளிகள் அளித்து வந்தனா்.

கரோனா பெருந்தொற்று உருவாகியிருந்த சூழ்நிலையில், நேரில் பெற்றுவந்த விண்ணப்பப் படிவங்களை இணையம் மூலம் விண்ணப்பிக்க அரசு உத்தரவிட்டது.

தற்போது பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தொழிலாளா்கள் பதிவு செய்யும் நடைமுறை இன்னமும் இணைய முறையில் நடைபெற்று வருகிறது.

இதனால் தொழிலாளா்களுக்கு அலைச்சல், செலவு ஏற்படுவதுடன், பணப் பயன்களை பெறுவதிலும், புதிதாக பதிவு செய்வதிலும் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பல தொழிலாளா்கள் தங்களது பதிவை தவிா்த்து வருகின்றனா்.

எனவே நலவாரியப் பதிவு மற்றும் பணப் பயன்களை பெற, தொழிலாளா்களிடமிருந்து அரசு விண்ணப்பப் படிவங்களை நேரில் பெற வேண்டும் என்று

மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலா் தண்டபாணி வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.