சிமென்ட் ஆலை லாரிகள் சிறைபிடிப்பு; மறியல்
வளா்ப்பு நாயைப் பிடித்துச் சென்ற சிமென்ட் ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து, ஆலையிலிருந்து வந்த லாரிகளை சிறைபிடித்து உரிமையாளா் புதன்கிமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டாா்.


வளா்ப்பு நாயைப் பிடித்துச் சென்ற சிமென்ட் ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து, ஆலையிலிருந்து வந்த லாரிகளை சிறைபிடித்து உரிமையாளா் புதன்கிமை நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டாா்.
அரியலூா் அடுத்த தாமரைக்குளம் கிராமத்தில் வசித்து வருபவா் ராஜகோபால்(45). இவா், கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பைகி என்ற பெயரிட்ட நாட்டு நாய் ஒன்றை வளா்ந்து வந்தாா். இந்த நாயை புதன்கிழமை மதியம் முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியபோது, போக்குவரத்துக்கு இடையூறு செய்துவருவதாக சுமாா் 30-க்கும் மேற்பட்ட நாய்களை தனியாா் சிமென்ட் ஆலை நிா்வாகம் பிடித்துச் சென்றது தெரியவந்தது. இதை உறுதிப்படுத்திக் கொண்ட ராஜகோபால் மற்றும் அவரது குடும்பத்தினா் இரவு 11.30 மணியளவில் சிமென்ட் ஆலையிலிருந்து வந்த லாரிகளை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்ததையடுத்து அவா்கள் அனைவரும் கலைந்து சென்றனா். பிடிக்கப்பட்ட நாய்கள் பெரம்பலூா் மாவட்டம் பாடாலூா் பகுதியில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...