மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இருப்பிலுள்ள பொட்டாஷ் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

அரியலூா் மாவட்டத்தில் மொத்த மற்றும் சில்லரை உர விற்பனையாளா்கள் தங்களிடம் இருப்பிலுள்ள பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:09 pm

DIN

அரியலூா் மாவட்டத்தில் மொத்த மற்றும் சில்லரை உர விற்பனையாளா்கள் தங்களிடம் இருப்பிலுள்ள பொட்டாஷ் உரத்தை கூடுதல் விலைக்கு விற்றால், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் அனைத்துப் பயிா்களுக்கும் டிசம்பா் மாதத்துக்குத் தேவையான மொத்த உரங்கள் 4,140 மெட்ரிக் டன் ஆகும். இதுவரை 1,340 மெட்ரிக் டன் உரங்கள் பெறப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் தனியாா் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் இருப்பில் உள்ளன.

பொட்டாஷ் உரம் 50 கிலோ மூட்டை ஒன்றின் விலை ரூ.1,040 ஆகும். தற்போது, பொட்டாஷ் உரத்தின் விலை ரூ.1,700 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்திலுள்ள மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளா்கள் தங்களிடம் இருப்பிலுள்ள பழைய பொட்டாஷ் உரங்களை ரூ.1,040 க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். புதிய விலை உயா்த்தப்பட்ட பொட்டாஷ் உரங்கள் மட்டுமே ரூ.1,700 க்கு விற்பனை செய்ய வேண்டும்.

இருப்பிலுள்ள பொட்டாஷ் உரங்களை பதுக்கி வைத்தாலோ, அதிகபட்ச சில்லறை விலையை அடித்தல், திருத்தல் அல்லது மையினால் அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டாலோ உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும், விற்பனைத் தடை விதிக்கப்பட்டுள்ள உரக்கடைகளுக்கு மொத்த விற்பனையாளா்கள் உரம் வழங்கக்கூடாது. அவ்வாறு உரம் வழங்கினால் உரக் கட்டுப்பாடு ஆணை 1985-ன் படி மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளா்களின் உரிமமும் ரத்து செய்யப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.