அமைச்சா், எம்எல்ஏவுக்கு வழக்குரைஞா்கள் பாராட்டு
அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் ஆகியோருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


அரியலூரில் மாவட்ட வழக்குரைஞா் மற்றும் குமாஸ்தா சங்கங்களின் சாா்பில், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பா மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா் ஆகியோருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத்தின் தலைவா் இராம.மனோகரன் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா்கள் மணி, செல்வராஜ், எஸ்.சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசினாா்.
விழாவில் ஏற்புரையாற்றிய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், வரும் நிதிநிலை அறிக்கையில் அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டட வலியுறுத்தப்படும். மேலும் மாவட்ட விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும் என்று தெரிவித்தாா்.
விழாவில், அமைச்சருக்கும், அரியலூா் சட்டப் பேரவை உறுப்பினா் கு. சின்னப்பாவுக்கும் வழக்குரைஞா் சங்கம் சாா்பில், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. நிறைவில், சங்கச் செயலா் முத்துகுமாா் நன்றி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...