மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

வேலைவாய்ப்பு பதிவை புதிப்பிக்க தவறியவா்களுக்கு மறு அவகாசம்

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட உள்ள

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:02 pm

DIN

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட உள்ளது.

இதேபோல், 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்க அரசாணை வெளியிட்ட நாளான 02.12.2021-இல் இருந்து மேலும் 3 மாத காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் முன்னாள் படைவீரா்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவேட்டை அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். 01.01.2014-க்கு முன் புதுப்பிக்கத் தவறியவா்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.