மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

ஜல்லிக்கட்டு நடத்த விரும்புவோா் உரிய அனுமதி பெற வேண்டும்

பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளா்கள் அரசிடம் அனுமதி அவசியம் பெறவேண்டும் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 8:01 pm

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூா் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் கிராம ஒருங்கிணைப்பாளா்கள் அரசிடம் அனுமதி அவசியம் பெறவேண்டும் என ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் அமைப்பினா் 20 நாள்களுக்கு முன்பே மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டு விவரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரா்களுக்கு மிகாமலும் மற்றும் பாா்வையாளா்கள் கட்டுப்பாடுகளுடன் பங்கேற்க அனுமதிக்கப்படுவா்.

மாடுபிடி வீரா்கள் கரோனா பெருந்தொற்று இல்லை என்ற சான்று, இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திய சான்று பெற்றிருக்க வேண்டும்.

ஆவணங்கள்: ஜல்லிக்கட்டு அனுமதி ஆவணம், உத்திரவாதப் பத்திரம், காப்பீடு நகல், தல வரைபடம் ஆகியவை விண்ணப்பத்துடன் சமா்ப்பிக்க வேண்டும். இவை சரிபாா்க்கப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும். காளை உரிமையாளா், ஒரு உதவியாளா் மற்றும் காளை விவரங்களை மாவட்ட நிா்வாகத்திடம் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.