4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம்: அமைச்சர் கே.என்.நேரு 

அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

News image
அரியலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்காக நடைபெற்ற பூமி பூஜை.
Updated On :27 டிசம்பர் 2021, 7:09 am

DIN

அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். 

அரியலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டி அமைப்பதற்கான பூமிபூஜை விழா இன்று (டிச 27) நடைபெற்றது. நிகழ்ச்சியில்  கலந்து கொண்ட மாநில நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியது: அரியலூரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் விரைவில் கட்டப்படும். 

அரியலூரைச் சுற்றியுள்ள கிராமங்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரியலூருடன் இணைக்கப்பட்டு பெரிய நகராட்சியாக மாற்றப்படும். அரியலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஊதிய பிரச்னை கலையப்படும் என்றார். தொடர்ந்து அரியலூர் பேருந்து நிலையத்தை பார்வையிட்டார். 

நிகழ்ச்சியில்,  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பொ.சந்திரசேகர், ஒன்றியக் குழு தலைவர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.