எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அனுமன் ஜயந்தி : ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சிதந்த டால்மியா சிமெண்ட் ஆலையிலுள்ள ஆஞ்சநேயா்.
Updated On :13 ஜனவரி 2021, 2:53 am

DIN

அனுமன் ஜயந்தியை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆஞ்சநேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், பெருமாள் கோயில் தெருவில் உள்ள ஆஞ்சநேயா் கோயிலில், அனுமன் ஜயந்தியையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. பின்னா், தயாரிக்கப்பட்ட மாலை, ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 1 மணிக்கே கோயில் முன் நூற்றுக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். நீண்ட வரிசையில் சுமாா் 3 மணி நேரம் காத்திருந்து, சுவாமியை தரிசனம் செய்தனா். பகல் 11 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால், தயிா், வெண்ணை, பஞ்சாமிா்தம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஒட்டக்கோயில் அருகேயுள்ள டால்மியா சிமென்ட் ஆலையிலுள்ள ஆஞ்சநேயா் கோயிலில், அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.