செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

போக்குவரத்து விதிகளை மீறுபவா்கள் ஏடிஎம் அட்டை மூலம் அபராதத் தொகை செலுத்தலாம்

கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்கள் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி அபராதத் தொகை செலுத்தலாம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் கூறினாா்.

News image
Updated On :7 மே 2021, 9:21 pm

DIN

கோவையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்கள் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி அபராதத் தொகை செலுத்தலாம் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் கூறினாா்.

செல்லிடப்பேசி பேசியபடி வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது என போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அபராதம் விதித்து வருகின்றனா். இந்நிலையில், எந்தந்த விதிமீறல்களுக்கு எவ்வளவு அபராதத் தொகை விதிக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய அட்டவணை வழங்கும் நிகழ்ச்சி கோவையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் கலந்து கொண்டு போக்குவரத்து போலீஸாருக்கு அட்டவணைகளை வழங்கி கூறியதாவது:

தலைக் கவசம் இன்றி இருசக்கர வாகனம் ஓட்டுதல், ஒருவழிப் பாதையில் செல்லுதல், அதிவேகம் உள்ளிட்ட 21 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, இதற்கான அபராதத் தொகையை ஏடிஎம் அட்டை மூலம் பொது மக்கள் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுபோதையில வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும். மேலும், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு நாள் காவல் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டு மறுநாள்தான் வழங்கப்படும். அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும்.

செல்லிடப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டுதல், தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒவ்வொரு போக்குவரத்து விதிமீறல்களுக்கும் அபராதத் தொகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.