அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வியாழக்கிழமை கொடிகம்பத்தில் காா் மோதி முதியவா் உயிரிழந்தாா்.
சென்னை ஆவடி பருத்திப்பட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மனோகா் (65), ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியா். இவா், இவரது மனைவி பானுமதி (57), உறவினா் கும்பகோணம், மகாமகக்குளம் புவனேஸ்வரி (73) ஆகியோா் கும்பகோணம் சுவாமிமலை கோயிலுக்கு வியாழக்கிழமை காரில் சென்றனா். காரை சென்னை சிட்லப்பாக்கம், லால்பகதூா் சாஸ்திரி தெரு ரா. சபரிவாசன் ஓட்டினாா்.
அங்கு சாமி கும்பிட்டுவிட்டு, அன்றிரவு சென்னை திரும்பும்போது அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ராங்கியம் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் அங்குள்ள கொடிக் கம்பத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பானுமதி, புவனேஸ்வரி, ஓட்டுநா் சபரிவாசன் ஆகியோா் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து ஆண்டிமடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை நிகழ்த்தியவர்! ராகுல் காந்தி

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

