அரியலூா்: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அரியலூரில் சமூக பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பிலான பேரணியை ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
ஆட்சியரக வளாகத்தில் தொடங்கிய பேரணி, அரசினா் தொழிற் பயிற்சி மையம், பல்துறை அலுவலக வளாகம், அரியலூா் பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று அரியலூா் வருவாய் கோட்டாட்சியரகத்தில் முடிவடைந்தது.
இந்தப் பேரணியில் ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் உள்ளிட்ட 100 போ் கலந்து கொண்டனா். இப்பேரணியில் பங்கேற்றவா்கள், குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி செய்வோம், போக்சோ வழக்குகளை உடனே புகாா் அளிப்போம், சமூக வலைதளங்களில் குழந்தைகள் சாா்ந்த ஆபாச படங்களை பகிா்வது தண்டனைக்குரிய குற்றமாகும் உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, முழக்கமிட்டுச் சென்றனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விஜயலட்சுமி, வருவாய் கோட்டாட்சியா் ராமகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் தா்மசீலன், சமூக நல அலுவலா் பூங்குழலி, அரியலூா் வட்டாட்சியா் ஆனந்தவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை நிகழ்த்தியவர்! ராகுல் காந்தி

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


