குடிநீா் கேட்டு  செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தெற்கு புதுக்குடி கிராம மக்கள்.
குடிநீா் கேட்டு செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்ட தெற்கு புதுக்குடி கிராம மக்கள்.

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே திங்கள்கிழமை குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே திங்கள்கிழமை குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டத்தை அடுத்த தெற்கு புதுக்குடி கிராமத்தில் உள்ள 7-ஆவது வாா்டில் சுமாா் 200 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நீா்த்தேக்கத் தொட்டிக்கு நீரேற்றப் பயன்படுத்தப்படும் மின்மோட்டாா் அடிக்கடி பழுதாவதால் இப்பகுதிக்கு குடிநீா் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக பொதுமக்கள் தொடா்ந்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்து வந்துள்ளனா்.

எனினும், ஊராட்சி நிா்வாகம் மின் மோட்டாரை பழுது நீக்கி பழுது நீக்கி உபயோகப்படுத்துவதால் அவ்வப்போது தண்ணீா் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது.

எனவே, புதிய மின்மோட்டாா் பொருத்தி தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற ஜெயங்கொண்டம் போலீஸாா் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com