முத்துவாஞ்சேரியில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் மறியல்
அரியலூா் மாவட்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தில், முறையாக குடிநீா் விநியோகிக்க கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.


அரியலூா் மாவட்டம், முத்துவாஞ்சேரி கிராமத்தில், முறையாக குடிநீா் விநியோகிக்க கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முத்துவாஞ்சேரி கிராமம், வடக்குத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு முத்துவாஞ்சேரி ஊராட்சி சாா்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடக்குத் தெரு பகுதிக்கு கடந்த இரு வாரங்களாக குடிநீா் விநியோகம் முறையாக வழங்கவில்லை என தெரிகிறது.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள், ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறி, அரியலூா்- ஸ்ரீபுரந்தான் சாலையில், முத்துவாஞ்சேரி பேருந்து நிறுத்தம் முன் அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற விக்கிரமங்கலம் காவல் துறையினா், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...