சிறுகளத்தூா் வலம்புரி ஜெய விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகளத்தூா் கிராமத்திலுள்ள வலம்புரி ஜெய விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.


அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகளத்தூா் கிராமத்திலுள்ள வலம்புரி ஜெய விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறுகளத்தூா் கிராமத்தில், சிதிலமடைந்து காணப்பட்ட வலம்புரி ஜெயவிநாயகா் கோயிலை, அக்கிராம மக்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனா். இதன்படி, புதன்கிழமை மாலை அக்கோயிலில் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, வியாழக்கிழமை காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து கோயில் கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி, கோபுர கலசம் மற்றும் மூலவருக்கு தீபாராதனை காண்பித்து, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கினா். சுற்று வட்டார பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள விநாயகா் கோயில் கும்பாபிஷேகமும் வியாழக்கிழமை நடைபெற்றது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...