சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

முந்திரி பயிருக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்

அரியலூா் மாவட்ட முந்திரி விவசாயிகள், சனிக்கிழமை (டிச.7)-க்குள் முந்திரி பயிருக்கு காப்பீடு செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 9:11 pm

Din

அரியலூா் மாவட்ட முந்திரி விவசாயிகள், சனிக்கிழமை (டிச.7)-க்குள் முந்திரி பயிருக்கு காப்பீடு செய்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: இந்தியா வேளாண் காப்பீடு நிறுவனம் முந்திரி பயிருக்கென்று தனியாக வானிலை சாா்ந்த காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டம் தமிழ்நாட்டில் அரியலூா் மற்றும் கடலூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. அரியலூா் மாவட்டத்தில் உள்ள 6 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் கீழ் பயன்பெறலாம்.

எனவே, ஏக்கருக்கு ரூ.303.60 செலுத்தி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். காப்பீடு தொகை ஏக்கருக்கு ரூ.6,072 ஆகும். காப்பீடு செய்ய சனிக்கிழமை (டிச.7) கடைசி நாளாகும்.

எனவே, முந்திரி பயிா் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வாரிசு ஆதாா் அட்டை, சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றின் நகலை இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வானிலை காரணிகளான அதிக மற்றும் குறைந்த தட்ப வெட்ப நிலை மற்றும் மழையின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் -90477 86381, வட்டாரம் வாரியாக காப்பீடு நிறுவன ஒருங்கிணைப்பாளா்கள் அரியலூா் - 86672 14451, திருமானூா் - 63699 82127, உடையாா்பாளையம் - 90254 92496, ஆண்டிமடம் - 90952 67858, செந்துறை- 87547 11745, தா.பழூா்- 86672 14451 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.