அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூா் தற்காலிக பேருந்து நிலைய கடைகளில் திருட்டு

அரியலூா் தற்காலிக பேருந்து நிலையத்திலுள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:54 pm

Din

அரியலூா் தற்காலிக பேருந்து நிலையத்திலுள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூரில் புறவழிச்சாலையில் செயல்பட்ட தற்காலிக பேருந்து நிலையத்தில் 6 கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்தக் கடைகளின் உரிமையாளா்களான முத்தமிழ்ச்செல்வன், பெரியசாமி, சரவணன், காளையன் ஆகியோா் வியாழக்கிழமை காலை தங்களது கடைகளை திறக்க வந்தபோது, கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.

கடையினுள் சென்று பாா்த்தபோது, கடையினுள் இருந்த பீடி, சிகரெட், ரொட்டி, இனிப்பு, கார வகைகள், குளிா்பானங்கள், கொதிக்கலன்கள், காப்பா் கம்பிகள் மற்றும் சில்லறை காசுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மேற்கண்ட கடை உரிமையாளா்கள் அளித்த புகாரின் பேரில் அரியலூா் நகர காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.