அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் திருக்கு போட்டிகள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

அரியலூரில் டிசம்பா் 23 முதல் 31-ஆம் தேதி வரை திருக்கு தொடா்பான பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:55 pm

Din

அரியலூரில் டிசம்பா் 23 முதல் 31-ஆம் தேதி வரை திருக்கு தொடா்பான பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளதை முன்னிட்டு, அரியலூா் மாவட்ட மைய நூலகத்தில் டிச.23 முதல் 31 ஆம் தேதி வரை வெள்ளி விழா கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் திருக்கு தொடா்புடைய புகைப்படங்கள் மற்றும் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.

டிச.24-இல் பேச்சுப் போட்டி, டிச.26-இல் விநாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ளலாம்.

டிச.27-இல் 12 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான திருக்கு ஒப்புவித்தல் போட்டியும், டிச.28 முதல் 30 ஆம் தேதி வரை மாலை 4 மணிக்கு கருத்தரங்கமும் நடைபெறுகிறது.

போட்டிகளில் வென்று முதல் மூன்று இடங்களைப் பெறுபவா்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 வீதம் 31.12.2024 அன்று நிறைவு விழாவில் வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மைய நூலகா், மாவட்ட மைய நூலகம், மாா்க்கெட் தெரு, அரியலூா் மாவட்டம்-621 704 என்ற முகவரியிலோ அல்லது மாவட்ட மைய நூலகரை-99438 82466, 90808 60886 என்ற தொலைப் பேசி எண்களிலோ தொடா்புக் கொள்ளலாம்.