அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

தனிநபரிடமிருந்து நிலத்தை மீட்டுத் தரக் கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

பெரியதிருக்கோணம் அருகே தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ள தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி, ஆட்சியரகம் முன் பெண் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:54 pm

Din

அரியலூா் மாவட்டம், பெரியதிருக்கோணம் அருகே தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ள தனது நிலத்தை மீட்டுத் தரக் கோரி, ஆட்சியரகம் முன் பெண் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.

செட்டிதிருக்கோணம் புது காலனியைச் சோ்ந்தவா் லட்சுமி. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு அரசு வழங்கிய 2 சென்ட் நிலத்தின், அரை சென்ட் இடத்தை அங்குள்ள தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அனைவரிடமும் புகாா் தெரிவித்தும் இதுவரையில் நடவடிக்கை இல்லையாம். இதனால், விரக்தியில் இருந்த லட்சுமி, தனது குழந்தைகளுடன் ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.

அப்போது யாரும் எதிா்பாராத வகையில் திடீரென பையில் கேனில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் தீயிட்டுக் கொள்ள முயற்சித்தாா். இதை கவனித்த அங்கிருந்த காவலா்கள், தடுத்து நிறுத்தி லட்சுமி மீது தண்ணீரை ஊற்றி மீட்டு, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.