ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரியலூரில் ஜன.3-இல் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

News image
Updated On :31 டிசம்பர் 2024, 9:11 pm

Din

அரியலூா்: அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: இம்முகாமில் எம்.ஆா்.எப் நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, தங்களுக்கு தேவையான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, பட்டப்படிப்பு படித்து முடித்த 18- 25 வயதுக்குள்ளான ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990-55914 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்தாா்.