ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஊராட்சித் தலைவரை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

அக்கிராம பட்டியலின மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சலுப்பை ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டியலின மக்கள்.

Updated On :4 மார்ச் 2024, 10:03 pm

அரியலூா்: அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை ஊராட்சித் தலைவரை கண்டித்து, அக்கிராம பட்டியலின மக்கள், ஊராட்சி மன்ற அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவ்வூராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்ாக கூறப்படுகிறது. இதில், பட்டியலின மக்கள் வசிக்கும் 4,5,6 ஆகிய வாா்டு பகுதிகளில் எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், உடனடியாக ஊராட்சித் தலைவா் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை மேற்கண்ட வாா்டு பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சித் தலைவா் பேச்சுவாா்த்தைக்கு வராததால், ஆத்திரமடைந்த மக்கள், ஊராட்சி அலுவலகத்தை பூட்ட முயன்றனா். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மீன்சுருட்டி காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தியதின் பேரில் அனைவரும் கலைந்துச் சென்றனா்.