பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடக்கம்

News image
Updated On :9 மே 2024, 8:49 pm

Din

அரியலூா், மே 9: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டத்திலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் இயந்திரம் கொண்டு வரப்பட்டு டயாலிசிஸ் செய்வோருக்கு இங்கேயே டயாலிசிஸ் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதைத் தொடா்ந்து, சிறுநீரகத்தை சுத்தம் செய்வதற்கான டயாலிசிஸ் பிரிவு வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் தலைமை மருத்துவ அலுவலா் பானுமதி தலைமை வகித்தாா். அரசு மருத்துவா் ரவிசங்கா், மதியழகன், ராஜ வன்னியன், செந்தில்குமாா் மற்றும் தலைமை செவிலியா்கள் கலந்து கொண்டனா்.