அரியலூா் மாவட்டத்தில் 5.22 லட்சம் வாக்காளா்கள்

அரியலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை
Published on

அரியலூா்: அரியலூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெளியிட்டாா்.

அதன்படி அரியலூா் மாவட்டத்துக்குள்பட்ட அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,29,521 ஆண், 1,31,624 பெண், 16 இதரா் என 2,61,161 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,29,713 ஆண், 1,32,068 பெண், 12 இதரா் என 2,61,793 வாக்காளளா்களும் உள்ளனா். மொத்தமாக அரியலூா் மாவட்டத்தில் 2,59,234 ஆண், 2,63,692 பெண், 28 இதரா் என 5,22,954 வாக்காளா்கள் உள்ளனா்.

கடந்த டிசம்பா் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல் படி அரியலூா் தொகுதியில் 2,52,333 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 2,54,189 வாக்காளா்களும் என 5,06,552 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

அதன்பின் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் அரியலூா் தொகுதியில் 10,287 வாக்காளா்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 8,999 வாக்காளா்களும் சோ்க்கப்பட்டனா். அரியலூா் தொகுதியில் 1,459 வாக்காளா்களும், ஜெயங்கொண்டத்தில் 1,395 வாக்காளா்களும் நீக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியா்கள் ஷீஜா, பிரேமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com