பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

News image
Updated On :9 மே 2024, 8:49 pm

Din

அரியலூா், மே 9: அரியலூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருமானூா் காந்தி நகரைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் செல்வகணபதி(39), அம்பேத்கா் நகரை சோ்ந்த செல்வராஜ் மகன் வெங்கடேசன்(25), வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த முத்துகுமாா் மகன் பாஸ்கா்(29). தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இவா்களை கடந்த மாதம் திருமானூா் காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இவா்கள் வெளியே இருந்தால் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ் பரிந்துரையின்பேரில், 3 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனி மேரி ஸ்வா்ணா வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து மூவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.