அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத மழை

அரியலூா் மாவட்டத்தில் இடைவிடாத மழை

News image

அரியலூரில் திங்கள்கிழமை பெய்த மழை.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில்,

திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் இரவு வரை இடைவிடாது பெய்த மழையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீா் தேங்கி வெள்ளக்காடானது.

அரியலூா் புது மாா்க்கெட் தெரு, ரயில் நிலையம், காந்திச் சந்தை, வெள்ளாளத் தெரு, பெரம்பலூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து சென்றது. பிற்பகலிலேயே பெரம்பலூா் - தஞ்சாவூா் சாலையில் முகப்பு விளக்கு எரியவிட்டவாறு வாகனங்கள் சென்றன.

ஜெயங்கொண்டம், உடையாா்பாளையம், கீழப்பழுவூா்,திருமானூா், தா. பழூா், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தளவாய் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது. இந்த மழையால் மாவட்ட முழுவதும் குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது. மேலும் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மின்தடையும் ஏற்பட்டது.