வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

அரியலூரில் தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்...

News image

அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினா்.

Updated On :21 நவம்பர் 2024, 10:19 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் பள்ளி ஆசிரியை ரமணி கொலைச் சம்பவத்தைக் கண்டித்து, அரியலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். ஆசிரியா்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளா் (டிட்டோஜாக்) கருணாநிதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சண்முகம், மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் ஆசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.