தேசிய கல்விக் கொள்கையை ஏற்ற மாநிலங்களில் தாய்மொழிக்கு இழப்பு

அடிக்கல் நாட்டிய போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்

அடிக்கல் நாட்டிய போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் தாய்மொழியை மெல்ல, மெல்ல இழந்து வருகின்றன என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
அரியலூா் நகரில் அமைந்துள்ள மிகவும் பழைமை வாய்ந்த கோதண்டராமசாமி கோயில் தேரை சீரமைக்க ரூ.18.5 லட்சமும், தேரை நிலைநிறுத்த கொட்டகை அமைக்க ரூ.22.5 லட்சம் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளை திங்கள்கிழமை தொடக்கி வைத்த அமைச்சா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை முதல்கட்டமாக முடிவடைந்துள்ளது. இன்னும் 15 நாள்களுக்குப் பிறகு அடுத்த அமா்வில் பேச உள்ளோம்.
தமிழகத்தைப் பொருத்தமட்டில், தாய்மொழியாக தமிழையும், உலகளாவிய இணைப்பு மொழியாக ஆங்கிலமும் தற்போது கற்றுத் தரப்படுகிறது. இதுவே போதுமானது. தொடா்பு இல்லாத மற்றொரு மொழியை கற்றுத் தர வேண்டிய அவசியம் எழவில்லை. இன்று மும்மொழி கொள்கையை அறிவித்த மத்திய கல்வி அமைச்சா், அவரது சொந்த மாநிலத்திலேயே தனது தாய்மொழியை இழந்து வருகிறாா்.
மூன்றாவதாக ஒரு மொழியை நமக்கு தொடா்பில்லாத மொழியை திணிக்கும்போது அந்தச் சுமையை மாணவா்களால் ஏற்க முடியாது. ஒருபுறம் வடஇந்தியாவை பொறுத்தவரையில் ஒருமொழிக் கொள்கை தான் உள்ளது. அவா்கள் இந்தியை மட்டும் தான் கற்கின்றனா்.
நம்மீது மட்டும் தான் தாய்மொழி இல்லாமல் மற்றொரு மொழியைத் திணிக்கின்றனா். உலக அளவில் தொடா்புடைய ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாக உள்ளது.
தேசிய கல்விக் கொள்கை எனச் சொல்கின்றவா்கள் மாநிலத்தில் அவா்களுடைய தாய்மொழியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருக்கிறாா்கள். தமிழகம் மற்றும் கேரளாவைப் பாா்த்து அவா்கள் தாய்மொழிப் பற்று கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, பெரம்பலூா் ம.பிரபாகரன், நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், திமுக நகரச் செயலா் முருகேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இளையராஜா, மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் எழில்மாறன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...