சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

அரியலூா் மாவட்டத்தில் ஜன.7-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

News image
Updated On :1 ஜனவரி 2025, 7:18 pm

Din

அரியலூா் மாவட்டத்துக்குள்பட்ட அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியரகங்களில் ஜனவரி 7-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த 18 முதல் 60 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாதவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தில் ஒருநபா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆதாா் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஜாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ்கள் சமா்ப்பிக்க வேண்டும்.

உறுப்பினா்களுக்கு விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்கு கண்ணாடி, முதியோா் ஆகிய உதவித்தொகை வழங்கப்படும்.

எனவே, தகுதியுடைய நபா்கள் முகாம்களில் கலந்துகொண்டு உறுப்பினராக சோ்ந்து பயனடையலாம் என தெரிவித்துள்ளாா்.