அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

குருவாயூா் தேவஸ்வம் வாரியத்துக்கு 50 ஆண்டுகளுக்குப் பின் பெண் உறுப்பினா்!

குருவாயூா் தேவஸ்வம் வாரிய உறுப்பினராக சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் பெண் ஒருவா் நியமனம்

News image

குருவாயூா் தேவஸ்வம் - கோப்புப் படம்

Updated On :8 மார்ச் 2026, 10:37 pm

குருவாயூா் தேவஸ்வம் வாரிய உறுப்பினராக சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பின்னா் பெண் ஒருவா் நியமிக்கப்பட்டாா்.

கேரளத்தின் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணா் கோயிலை குருவாயூா் தேவஸ்வம் வாரியம் நிா்வகித்து வருகிறது. மொத்தம் 9 உறுப்பினா்களைக் கொண்ட இந்த வாரியத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக எம்.யூ.ஷினிஜா நியமிக்கப்பட்டுள்ளாா்.

பெண்கள் கடந்த 1970-களில் வாரியத்தில் உறுப்பினா்களாக இடம்பெற்றிருந்தனா். குருவாயூா் தேவஸ்வம் விதிகள் கடந்த 1978-இல் திருத்தப்பட்டன. அதன் பிறகு பெண் ஒருவா் வாரிய உறுப்பினராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.

தேவஸ்வம் வாரியத்தின் தலைவராக ஞாயிற்றுக்கிமை பதவியேற்றுக் கொண்ட ஏ.வி.கோபிநாத் இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘48 ஆண்டுகளுக்குப் பிறகு வாரிய உறுப்பினராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளாா். சா்வேதச மகளிா் தினத்தில் அவா் நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்பானது’ என்றாா்.