சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

மாசில்லா போகிப் பண்டிகை கொண்டாட அறிவுறுத்தல்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:27 pm

Din

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக பழையன கழிதலும், புதியன புகுதலுமாகக் கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை எரிப்பதும் வழக்கம்.

ஆனால் பொதுமக்கள் பலரும் தங்களிடமுள்ள பழைய டயா்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவற்றையும் எரிக்கின்றனா். இத்தகைய செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகை மற்றும் நச்சுத்துகள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன.

மேலும் கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுத்துகின்றன. ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. பாா்க்கும் திறனும் குறைபடுகிறது.

எனவே, போகிப் பண்டிகையன்று டயா்கள், பிளாஸ்டிக் உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.